ஜெயலலிதா டு டி. ஆர் வரை! – தமிழக அரசியலில் சினிமா பிரபலங்களைத் தோற்கடித்த வேட்பாளர்கள் யார் யார்?| Who are the candidates who defeated film celebrities in Tamil Nadu politics?

Spread the love

தமிழக அரசியலில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் பெரும் வெற்றி பெற்றாலும், பல முன்னணித் திரை நட்சத்திரங்கள் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தும் தேர்தல் களத்தில் அதிர்ச்சித் தோல்விகளைச் சந்தித்திருக்கிறார்கள்.

தமிழக அரசியலில் சினிமா பிரபலங்களைத் தோற்கடித்த வேட்பாளர்கள் யார் யார்?

சிவாஜி கணேசன்

* தமிழகத்தின் “நடிகர் திலகம்’ என்று போற்றப்பட்ட சிவாஜி கணேசன், 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டார். தனது சொந்தக் கட்சியான ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ சார்பில் போட்டியிட்ட அவர் வளர்ந்து வந்த தி.மு.க வேட்பாளர் துரை சந்திரசேகரனிடம் தோல்வியடைந்தார்.

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்

டி. ராஜேந்தர்

* லட்சிய தி.மு.க என்ற கட்சியை ஆரம்பித்த டி. ராஜேந்தர் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னை பூங்கா நகரில் போட்டியிட்டார். இவரை அ.தி.மு.க ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் எஸ். செல்வராஜ் தோற்கடித்தார்.

சினிமாவில் பெரிய வெற்றி பெற்ற டி.ஆரால் அரசியலில் நிலையான வெற்றியைப் பெற முடியவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *