“ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் சசிகலா” – மேடையில் பேசிய தளவாய் சுந்தரத்தை போனில் மிரட்டிய நபர் யார்? \ “Sasikala is reason for Jayalalithaa’s death” – Thalavai Sundaram threatened over phone

Spread the love

சின்னம்மா இல்லைன்ன, அந்தக் குடும்பம் இல்லைன்ன நீ யாரு? உன்ன உருவாக்குனது சின்னம்மா குடும்பம். இதுதான் உனக்கு ஃபஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங். இனிமேல் நீ பேசக்கூடாது. இப்போது பேசியதற்கு எப்போது மறுப்பு தெரிவிப்பாய் என்பதை சொல்லுண்ணே.

நாங்க கௌரவத்துக்காக வாழக்கூடியவங்க. என்கிட்ட என்ன வசதி வாய்ப்பு இல்ல சொல்லு. நான் எந்த ரூபத்திலயும் போவேன். இனிமேல் இந்த வார்த்தை வந்தால் எந்த மேடையும் நீங்க ஏறமாட்டீங்க” என மிரட்டும் தொனியில் எதிர்முனையில் பேசியவர் ஆவேசமானார்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம்

அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம்

எதிர்முனையில் பேசியது யார் எனத் தெரியவில்லை. அதே சமயம் அந்த நபரிடம் பயம் கலந்த எச்சரிக்கையுடன் பதிலளித்துப் பேசியவர் தளவாய் சுந்தரம் என்று கூறப்படுகிறது.

அந்தப் பதிலில், “நான் மட்டுமா பேசினேன், முனுசாமி போன்ற பலரும் பேசியிருக்கிறார்கள். நான் இனி பேசமாட்டேன் எனச் சொல்லிவிட்டேனே. என்னிடம் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா? இனி என் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்தால் நீ என்ன வேணும்னாலும் செய், நான் கவலைப்படவில்லை.

நான் மறுப்பு தெரிவித்தால் எந்தப் பத்திரிகையிலும் போடமாட்டார்கள். நூத்துக்கு நூறு சதவிகிதம் பேசமாட்டேன். இனி எதாவது வந்தால் நானே முந்திக்கொண்டு உனக்கு போனைப் போட்டு பேசுகிறேன். நீ என்ன அண்ணனா பார்க்கிறாய், நான் உன்னை தம்பியா பார்க்கிறேன்.

இனிமேல் இதுமாதிரி வார்த்தை வந்தால் நீ என்ன வேணும்னாலும் பேசிக்க” என முடித்தார்.

எதிர்முனையில் பேசியது யார், அவரிடம் பவ்யமாகப் பேசியது ஏன், அந்த ஆடியோவை வெளியிட்டது யார், பதிலளித்தது தளவாய் சுந்தரம் தானா என்பன போன்ற கேள்விகளைக் கேட்கலாம் என்று தளவாய் சுந்தரத்திடம் போனில் தொடர்புகொண்டால் சுவிட் ஆஃப் என வருகிறது.

அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பேசினால், “அது பற்றி தெரியவில்லை’ எனப் பதில் வருகிறது. உண்மையில் என்ன நடந்தது எனத் தளவாய் சுந்தரம் வெளிப்படையாகப் பேசினால்தான் தெரியவரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *