ஜெய்ப்பூரில் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையம்: சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி தகவல் | Minister R Gandhi says Co-optex opens new outlet in Jaipur

1355581.jpg
Spread the love

சென்னை: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத்தை திறக்கவிருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பிற மாநிலங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைக்கப்படுமா என்று பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் ஆர்.காந்தி பதில் அளித்து பேசியதாவது: இந்தியா முழுவதும் 150 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 106 விற்பனை நிலையங்களும், பிற மாநிலங்களில் 44 நிலையங்களும் செயல்படுகின்றன. ஆந்திராவில் 8, தெலங்கானா, கர்நாடகா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 3 நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தெலங்கானா, ஆந்திராவில் விற்பனை நிலையம் புதிப்பிக்கப்பட்டு திறப்பட்டுள்ளது. ஆந்திராவில் நடைபெற்ற திறப்பு விழாவில் பாஜக அமைச்சர் பங்கேற்று, கோ-ஆப்டெக்ஸில் பொருட்கள் தரமாக உள்ளதாக பாராட்டினார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புதிதாக விற்பனை நிலையம் தொடங்கப்படவுள்ளது. அதற்காக ரூ.44 லட்சத்தில் 900 சதுர அடி பரப்பளவில் விற்பனை நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *