ஏனெனில் அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. உங்கள் நாட்டை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்போது 200 கோடி பேரில் நீங்களும் ஒருவர்.
அந்த எண்ணமே உங்களுக்கு கூர்மையான கவனத்தை ஏற்படுத்தி, நீங்கள் செய்ய விரும்புவதை வெற்றிகரமாகச் செய்வதற்குப் போதுமானது” என்று கூறினார்.
மேலும், அணியில் உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “முதலில், அதை நான் பிரச்னைகளாகப் பார்ப்பதில்லை. ஏனெனில், எல்லோருமே நாட்டிற்காகப் போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார்கள்.

நாட்டிற்காக எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கிறது.
உண்மையாகச் சொல்லப்போனால், நாம் அந்த வாக்குவாதங்களைச் செய்யவில்லையென்றால், களத்தில் நம்மால் வெற்றி பெற முடியாது.
ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும் வகையிலான விவாதங்களை நாம் செய்யவில்லையென்றால், அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதில் நமக்குத் தேவையான அளவு ஆர்வம் இல்லை என்று அர்த்தம்.
எனவே, நாங்கள் நிச்சயமாக அந்த மாதிரியான விவாதங்களை மேற்கொள்கிறோம்” என்று மந்தனா தெரிவித்தார்.
டிசம்பர் 21-ம் தேதி தொடங்கும் தொடரில் இலங்கைக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.