ஜனவரி 21 ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மூன்று நாட்கள் சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் இந்த நிகழ்ச்சி நடக்க உள்ளது. மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சுவாமி முகுந்தானந்தா சிறப்புரை
ஐ.ஐ.டி (IIT) மற்றும் ஐ.ஐ.எம் (IIM) ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் பயின்ற பட்டதாரியான சுவாமி முகுந்தானந்தா, ஒரு சிறந்த வேத அறிஞர் மற்றும் பக்தி துறவி ஆவார். பழமையான ஆன்மீகப் போதனைகளை இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப எளிய முறையில் விளக்குவதில் அவர் தனித்துவம் மிக்கவர். கடந்த பல ஆண்டுகளாக அவர் சென்னைக்குத் தொடர்ந்து வருகை தந்து, ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் சத்சங்கங்கள் மற்றும் சொற்பொழிவுகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் மூன்று நாட்கள் நடைபெறும் “வாழ்க்கை மாற்றத் திட்டம்” நிகழ்ச்சியை நடத்துகிறார்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்
ஆங்கிலத்தில் நடைபெறவுள்ள இந்த மாலை நேர அமர்வுகள் பகவத் கீதை, உபநிடதங்கள் மற்றும் நாரத பக்தி சூத்திரங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆழ்ந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டவை. அறிவுசார் உரைகள்: வாழ்க்கையில் தெளிவு மற்றும் சமநிலையைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள்.
பக்தி கீர்த்தனைகளில் இருந்து உள்ளத்திற்கு அமைதி தரும் இன்னிசைப் பாடல்கள். ரூபத்யான தியானம்: அடிப்படையில் வழிகாட்டப்பட்ட தியானப் பயிற்சி.
கேள்வி-பதில் அமர்வு: பங்கேற்பாளர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு. ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் மட்டுமின்றி, அன்றாட வாழ்வில் மன அமைதியையும் நோக்கத்தையும் தேடும் அனைவரும் இதில் பங்கேற்றுப் பயன்பெறலாம்.
