அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நினைவாற்றல் அற்றவர் என்று விமர்சித்ததற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மருத்துவர் அமைப்பு கோரியுள்ளது.
மகாராஷ்டிரத்தின் அமராவதியில் நவ. 16 ஆம் தேதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “அமெரிக்க அதிபர் ஜோ பைடனைப் போலவே பிரதமர் மோடியும் நினைவாற்றல் இழப்பை அனுபவித்து வருவதாகத் தெரிகிறது’’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில், ராகுலின் இந்த விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தாயாரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்திக்கு தேசிய மருத்துவர் அமைப்பு பாரத் (National Medicos Organisation Bharat) கடிதம் எழுதியுள்ளது.
கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது, “ஒரு பொது மேடையில் தலைவர்கள் குறித்த இதுபோன்ற அறிக்கைகளோ விமர்சனங்களோ, தவறான தகவல்களை நிலைநிறுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் புரிதல், சிகிச்சை மீதான எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும்.
அமெரிக்க அதிபர் பைடனின் அறிவாற்றல் திறன்களை இழிவுபடுத்துவதுபோல் வெளிப்பட்ட ராகுல் காந்தியின் கருத்துக்கள் கவலையை அளிக்கிறது.