அதில் ஆர்ட் தானாக வளரும். அதனால் நாம் இப்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது முதலில் ஆர்ட் பிறகுதான் பிசினஸ். இதை நான் கடைபிடிக்கிறேன்.
டாணாக்காரன் பட கதாப்பாத்திரத்தின் அறிவுக்கும், சிறை கதாப்பாத்திரத்தில் இருக்கும் கதிரவனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். அறிவு காவல்துறையில் பயிற்சி எடுக்க போன இடத்துல, அந்த சிஸ்டம் பார்த்து அதிர்ச்சியாகி அந்த சிஸ்டம் பத்தின ஒரு கருத்து வைத்திருப்பான்.
சிறை படத்தில் 12 வருடங்களாக காவல்துறையில் வேலை செய்யும் ஒரு காவல்துறை அதிகாரி, அவருக்குள் அந்த போலீஸ் என்னவெல்லாம் செய்யும், அவர் ஒரு பிரச்னையை அணுகும் விதத்தில் தொடங்கி எல்லாமே வித்தியாசமா இருக்கும். உங்களால கண்டிப்பா அதை புரிந்து அனுபவிக்க முடியும்.
எனக்கு எல்லா வருடமும் சந்தோஷமான வருடம்தான். ஒவ்வொரு வருடமும் இந்த வருடத்தில் நாம் என்ன தவறுகளைச் செய்தோம்… இதிலிருந்து என்ன பாடங்களைக் கற்றோம் என யோசிப்பேன். இதுவரைக்கும் வந்த வருடங்கள் எல்லாமே, நல்லதும் நடந்துருக்கு கத்துக்க வேண்டிய இடங்களும் இருந்திருக்கு. அடுத்தடுத்தது நல்லதே செய்துக்கொண்டிருந்தால் நல்லதே வரும் என்கிற நம்பிக்கையில் கடந்துச்சென்றுகொண்டே இருக்கிறேன்.” என்றார்.