டாப் ஆர்டர் நன்றாக விளையாட வேண்டும்
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பாக்ஸிங் டே போட்டி மெல்போர்னில் நடைபெறவுள்ள நிலையில், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட வேண்டும் என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வெளிநாடுகளில் விளையாடும்போது, அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் விளையாடும்போது, அவர்கள் மிகவும் நன்றாக விளையாட வேண்டும். முன்வரிசை ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடத் தவறும்போது, பின்வரிசை ஆட்டக்காரர்களின் மீதான பொறுப்பும் அழுத்தமும் அதிகரிக்கிறது. மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக செயல்பட்டு ரன்கள் குவிப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.