டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 217 பேருக்கு பணி ஆணை: அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார் | Minister Anbil Mahesh issues job orders to 217 candidates selected through TNPSC

1354954.jpg
Spread the love

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 186 நேரடி நியமன இளநிலை உதவியாளர்களுக்கு கடந்த மார்ச் 15-ம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடத்தப்பட்டது. அக்கலந்தாய்வில் தங்களுக்கு விருப்பமான பணியிடங்களை தேர்வு செய்த 186 பேர் , பொது நூலகத்துறைக்கு தெர்வு செய்யப்பட்ட 24 பேர் , தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 7 பேர் என மொத்தம் 217 பேருக்கு பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அரசு செயலர் எஸ்.ஜெயந்தி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு பொது நூலகத் துறை இயக்குநர் பொ.சங்கர், பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் செயலர் பெ.குப்புசாமி, இணை இயக்குநர் த.ராஜேந்திரன், சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *