உங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் ஐந்து நாள்கள் தான் மீதம் உள்ளன. ஆம்… பான் – ஆதார் இணைப்பிற்கு வரும் டிசம்பர் 31-ம் தேதியே கடைசி. இதை தவறவிட்டு விட்டால், வரும் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து உங்களது பான் கார்டு செல்லாது.
இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
வருமான வரி வலைதளத்திற்குள் செல்லவும்.
Quick Links > Link Aadhar Card-ஐ கிளிக் செய்யவும்.
இந்தப் பக்கத்தில் பான் மற்றும் ஆதார் எண்ணை நிரப்பி “Validate’ கொடுக்கவும்.
உங்களது பான் ஆதார் எண்ணோடு இணைந்திருந்தால், ‘Already Linked’ என்று தெரிவிக்கும்.
ஒருவேளை, இல்லையென்றால், நீங்கள் அபராதமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.

பின்னர், இங்கே கேட்கப்படும் தகவல்களை நிரப்பி, ‘Link Aadhar Option’-ஐ கிளிக் செய்யவும்.
அடுத்ததாக, உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை நிரப்பிக் கொள்ளவும்.
பிறகு, ‘Submit’ கொடுத்தால், அடுத்த 4 – 5 வேலை நாள்களுக்குள் பான் – ஆதார் இணைப்பு நடந்துவிடும்.