சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் களத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசியல் புள்ளிகளின் கட்சி மாற்றம், கூட்டணி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
முக்கியமாக அதிமுக – பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிரடி மாற்றங்களுக்காக அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது. அண்ணாமலைக்கு பாஜகவில் பவர்ஃபுல்லான பதவி கிடைக்க போகிறது, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைய போகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் மூலம் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

வீட்டில் விருந்து வைத்த அண்ணாமலை?
கோவையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக உரிமை மீட்பு குழு நிர்வாகி இல்ல விழாவில், அண்ணாமலை ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். அந்த பரபரப்பு ஓய்வதற்குள் அடுத்த சம்பவம் நடந்துள்ளது. அமமுக கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டிடிவி தினகரன் கடந்த சில நாள்களுக்கு முன்பே கோவை வந்துவிட்டார்.