திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது.
இது குறித்து பேசிய விவசாயிகள், “கடற்கரை ஓரமான முத்துப்பேட்டை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தில்லைவிளாகம், இடுபவனம், எடையூர், உதயமார்த்தாண்டபுரம், கோவிலூர், உப்பூர், ஆலங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது.
இதில் சம்பா மற்றும் தாளடி பயிர் நீரில் மூழ்கியுள்ளன. முத்துப்பேட்டையில் தாழ்வான பகுதியில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நம்மங்குறிச்சி சாலையில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் பழங்குடியினர் வசிக்கின்றனர். இந்தக் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு கோவிலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தாழ்வான இப்பகுதியில் மழை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். இதற்கு ஒரு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். டெல்டா மாவட்டத்தில் வயல்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் பயிர் நீரில் மூழ்கியுள்ளதால் கடும் பாதிப்பைச் சந்திக்கக் கூடிய நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்” என்றார்.