ஆட்டோமொபைல்களுக்கான வரிவிதிப்பு ஏப்ரல் 4 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
கார்கள்
அமெரிக்காவில் ஒரு ஆட்டோமொபைல் வாங்குவதற்கும் அதைப் பராமரிப்பதற்கும் ஆகும் செலவு வரும் காலத்தில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். கார்கள் மற்றும் உதிரி பாகங்கள் மீது 25 சதவீத வரியை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் உதிரி பாகங்கள் மீதான வரிகள் வாகனத்தைப் பொறுத்து சுமார் 4,000 – 10,000 டாலர்கள் வரை விலை உயரும்.
ஆடைகள்
வால்மார்ட் மற்றும் டார்கெட் போன்ற அமெரிக்க துணிக்கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான ஆடைகள் மற்றும் காலணிகள் அமெரிக்காவிற்கு வெளியேதான் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் சீனா, வியட்நாம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதியாளர்களில் உள்ளனர். சீனா மீது 34 சதவிகிதமும், வியட்நாம் மீது 46 சதவிகிதமும், வங்கதேசத்தின் மீது 37 சதவிகிதமும் வரிவிதிப்பை எதிர்கொள்கின்றன.
சுவிஸ் கடிகாரங்கள்
ரோலக்ஸ் போன்ற விலையுயர்ந்த சுவிஸ் கடிகாரத்தை வாங்க வேண்டும் என்ற அமெரிக்கரின் கனவும் மேலும் விலை உயர்ந்ததாக மாறியுள்ளது. இந்த கடிகாரங்களின் விலை 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஆப்பிளின் ஐபோன்கள், ஐபேட்கள்
ஆப்பிள் தயாரிப்புகளின் பெரிய ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா உள்ளது. இருப்பினும், டிரம்ப், சீனாவுக்கு 34 சதவீத பரஸ்பர வரியை விதித்துள்ளார்.
வீட்டு உபயோகப் பொருள்கள்
டிரம்பின் அதிக வரிவிதிப்பின் மூலம் அமெரிக்காவில் ஒருவரின் வீட்டைப் புதுப்பித்தல் என்பதுகூட அதிக விலை கொண்டதாக மாற இருக்கிறது.
அமெரிக்காவில் விற்கப்படும் வீட்டு உபயோகப் பொருள்களில் சுமார் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை பிற நாடுகளில் தயாரிக்கப்படுகின்றன. சீனா மற்றும் வியட்நாம் அமெரிக்காவிற்கு அதிக ஏற்றுமதியாளர்களாக உள்ளன.
இந்தப் பட்டியலில் உள்ள மற்ற முக்கிய பொருள் ஏற்றுமதிகளில் இந்தோனேசியாவும் இருக்கிறது. இதற்கு 32 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக அமெரிக்காவிற்கு பொருள்கள் ஏற்றுமதி செய்யும் இந்தியாவும் 26 சதவிகித வரியைச் சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தாயகம் திரும்பினார் ரபாடா: குஜராத் அணிக்குப் பின்னடைவா?