இருநாட்டு தலைவர்களின் தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலில், உலக அமைதிக்காக இணைந்து பணியாற்ற இரு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் பேசும்போது, “ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் மோடியை விரும்புவதாகக்” குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்தியா ஒரு மாபெரும் தேசம், அதேபோல, பிரதமர் மோடி மகத்தானதொரு மனிதர். பிரதமர் மோடியையும், இந்தியாவையும் உண்மையான நண்பராகக் கருதுவதாகப்” பாராட்டியுள்ளார். உலகத் தலைவர்களில் மோடியுடன்தான் எனது முதல் உரையாடல் அமைந்துவிட்டதாக டிரம்ப் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.