டிரம்ப் வெற்றியால் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு பலமடங்கு உயர்வு!

Dinamani2f2024 11 072ft2qlrzyy2fgbsrmzzbaaaacn0.jpg
Spread the love

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்பின் வெற்றியின் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்துமதிப்பு 26.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், இந்தத் தேர்தலில் டிரம்பின் மிகப்பெரிய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். அவருடைய பிரசாரத்திற்கு சுமார் 119 பில்லியன் டாலர்களை நன்கொடை அளித்திருந்தார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அவரது நிகர மதிப்பு 26.5 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 290 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவரது நிறுவனங்களின் பங்குகள் கூடியுள்ளன.

டெஸ்லாவின் ஒரு பங்கு 14.75% (37.09 டாலர்கள்) அதிகரித்து 288.53 டாலரை எட்டியுள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி அன்று 242.84 டாலராக இருந்த பங்குகள், நவம்பர் 6 ஆம் தேதி 288.53 டாலராக உயர்ந்துள்ளது.

டிரம்பின் வெற்றியால் எலான் மஸ்க் மட்டுமின்றி உலகின் இரண்டாவது பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் நிகர மதிப்பு 7.14 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 228 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்க பங்குச் சந்தை பொதுவாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *