டிராகன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் டிராகன் திரைப்படம் உருவாகிவருகிறது.
இந்தத் திரைப்படத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகிய இயக்குநர்கள் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்
மேலும் இப்படத்தில் காயுடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத் ஆகியோர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள்.. ‘டிரெயின்’ படத்தின் ’சிறப்பு விடியோ’ வெளியீடு!
#Dragon in theatres from Feb 14
Happy Bday #Aghoram sir pic.twitter.com/deUQtLVUu2— Pradeep Ranganathan (@pradeeponelife) January 15, 2025
முன்னதாக பிரதீப் ரங்கனாதனின் லவ் டுடே, அஷ்வத் மாரிமுத்துவின் ஓ மை கடவுளே ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், டிராகன் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
இந்த நிலையில், டிராகன் திரைப்படம் காதலர் தினத்தையொட்டி பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.