டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டினை வீழ்த்திய முகமது சிராஜ், அவரை பெவிலியன் செல்லுமாறு ஆக்ரோஷமாக கையால் சைகை செய்தார். இதனையடுத்து, டிராவிஸ் ஹெட்டும் பதிலுக்கு ஏதோ கூறிவிட்டு பெவிலியன் திரும்பினார்.
முகமது சிராஜ் நன்றாக பந்துவீசியதாக கூறியதாக டிராவிஸ் ஹெட்டும், டிராவிஸ் ஹெட் பொய் கூறுவதாக முகமது சிராஜும் தெரிவித்ததையடுத்து, இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானது.
ரோஹித் சர்மா, பாட் கம்மின்ஸ் கூறியதென்ன?
டிராவிஸ் ஹெட் – முகமது சிராஜ் இடையேயான இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளின் கேப்டன்களும் பேசியுள்ளனர்.
அவர்கள் பேசியது பின்வருமாறு,