டி 20 உலகக்கோப்பை இந்தியா – இங்கிலாந்து நாளை மோதல்: இறுதி போட்டிக்கு நுழைய போவது யார் ? – Kumudam

Spread the love

ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இத்தொடர் தற்போது அரையிறுதி போட்டியை எட்டி உள்ளது. முதல் அரையிறுதி போட்டி இன்று (மார்ச் 04) நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. 

இதே போன்று  2026 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டியில் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.  2வது அரையிறுதிப் போட்டியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. சூப்பர் 8 சுற்றின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றுத் தட்டுத்தடுமாறிய இந்திய அணி, பின்னர் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

போட்டியில் வெற்றி பெறுவதற்காக இந்திய வீரர்களும் தீவிரமாக வலை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில், ஒருவேளை போட்டி நடைபெறும் நாளில் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தானால் என்ன நடக்கும் என்ற கவலை ரசிகர்களிடையே எழுந்துள்ளது.இந்தியா – இங்கிலாந்து இடையிலான அரையிறுதிப் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டால், அதனை ஈடுசெய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு ‘ரிசர்வ் டே’ (கூடுதல் நாள்) ஒதுக்கியுள்ளது. 

ஒருவேளை ஆட்டம் தாமதமானால், வியாழக்கிழமை கூடுதலாக 90 நிமிடங்களும், வெள்ளிக்கிழமை கூடுதலாக 120 நிமிடங்களும் நடுவர்களுக்கு அவகாசம் வழங்கப்படும். எப்படியாவது ஒரு அணிக்குக் குறைந்தபட்சம் 5 ஓவர்கள் வீசப்பட்டு ஆட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்பதே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த அரையிறுதியில் இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தி, பின்னர் பாகிஸ்தானையும் ஜெயித்து கோப்பையைக் கைப்பற்றியது. அதற்குப் பழிவாங்கும் விதமாக, 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தியது. அந்த உத்வேகத்துடன் இறுதிப்போட்டிக்குச் சென்ற இந்தியா, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடதக்கது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *