டி 20 உலகக் கோப்பை: இந்தியாவில் விளையாட மாட்டோம் வங்கதேச அணி முடிவு – Kumudam

Spread the love

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்த 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடரில் சி பிரிவில் வங்கதேச அணி இடம்பெற்று உள்ளது. இந்த அணி விளையாடும் போட்டிகள் கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெற உள்ளது. 

தற்போது வங்கதேசத்தில் மைனாரிட்டி இந்துக்கள் தாக்கப்படுவதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.இதற்கு பதிலடியாக வங்கதேசத்தில் ஐபிஎல் ஒளிப்பரப்புக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.

அதுமட்டுமின்றி, ‘டி-20′ உலக கோப்பை தொடரில் (பிப்.7-மார்ச் 8, 2026) பங்கேற்க, இந்தியா வர, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) மறுக்கிறது. போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) வேண்டுகோள் விடுத்தது. இதை ஏற்க மறுத்த ஐ.சி.சி.,’இந்தியா வருவது குறித்து இன்றைக்குள் இறுதி முடிவெடுக்க வேண்டும்,’ என கெடு விதித்தது. 

பிப்ரவரி 7ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்குப் பயணம் செய்யப் போவதில்லை என வங்கதேச அணி தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், தங்களது டி20 உலகக் கோப்பைப் போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *