எப்போதுமே உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். எனது கேப்டன்ஷிப்பில் பல முறை நடந்துள்ளது.
எல்லோரையும் உங்களால் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் அந்த முடிவு (அணியில் நீக்கம்) ஏன் எடுக்கப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட வீரர்கள் தெரிந்து கொள்வது முக்கியம்.
2022-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடரில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர் தேவை என கருதினோம்.
இதன் காரணமாக ஸ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக தீபக் ஹூடாவை தேர்வு செய்தோம். எங்களைப் பொறுத்தவரை, அணியில் உள்ள 15 வீரர்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்பது தான் முக்கியம்.
உலகக் கோப்பையை நோக்கிச் செல்லும்போது, அதை வெல்வதுதான் ஒரே குறிக்கோள். அதற்கு, உங்களுக்கு வெளிப்படையான உரையாடல்கள் தேவை” என்று ரோஹித் ஷர்மா பேசியிருக்கிறார்.