இவற்றில், தமிழக வீராங்கனைகள் கீர்த்தனா 3 தங்கப் பதக்கமும், காசிமா ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கமும், மித்ரா ஒரு தங்கப் பதக்கம் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
அதேபோல் தமிழக வீரர் அப்துல்லா ஆசிஃப் இதே தொடரில் ஸ்விஸ் லீக் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். நேற்று மாலை தமிழகம் திரும்பிய இவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்களிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தனா, “இந்தியாவுக்காக விளையாடியது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. SDAT ( Sports Development Authority of Tamilnadu) ரொம்ப உதவி பண்ணாங்க.
இந்த உலகக் கோப்பைக்கு எப்படி நான் போறதுன்னு தவிச்சுக்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துல உதயநிதி சார் கூப்பிட்டாரு. ஒரு லட்சம் தருவார்னு நெனச்சேன் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கொடுத்தார்.

அவர் கொடுத்த காசுலதான் நான் போய்ட்டு ஜெயிச்சுட்டு வந்திருக்கேன். முதல்முறையா இந்தியாவுக்காக விளையாடுனது ரொம்பப் பெருமையா இருக்கு.
என்னோட குடும்பம் எனக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணாங்க. மரிய இருதயம் (அர்ஜுனா விருது வென்றவர்) சார், நாசர் அலிகான் அவர்களுக்கு நன்றி.
உதயநிதி சார் ஜெயிச்சுட்டு வரணும்னு சொன்னாரு. அவர் என்கரேஜ் பண்ணதுல ஜெயிச்சிட்டு வந்தது ரொம்ப பெருமையா இருக்கு.
டீம், டபுள்ஸ், சிங்கிள்ஸ் எல்லாத்துலயும் ஜெயிச்சிருக்கோம். நான் பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். நாங்க ஏழ்மையான குடும்பம், வீட்டு வசதி இல்ல. எனக்கு ஏதாவது ஒரு அரசு வேலை, வீடு கட்டித் தருமாறு அரசைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்தார்.