‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை  – சுத்தம் சுகாதாரம்’ விழிப்புணர்வு தொடர் | Hindu Tamil Thisai – Cleanliness and Hygiene Awareness Series

Spread the love

சென்னை: பள்​ளிக் குழந்​தைகளிடம் சுத்​தம், சுகா​தா​ரம் குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​தும் வகை​யில் `டெட்​டால் பநேகா ஸ்வஸ்த் இந்​தியா (DBSI)’ பல்​வேறு சிறப்​பான செயல்​பாடு​களை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் சேர்ந்து முன்​னெடுத்து வரு​கிறது. இதில் கிரா​மாலயா தொண்டு நிறு​வன​மும் இணைந்​துள்​ளது.

‘கோ​விட்’ வைரஸ் தொற்​றுப் பரவலின்​போது நாம் அனை​வருமே சில சுகா​தா​ரப் பழக்​கங்​களை முறை​யாகக் கடைப்​பிடித்தோம். அதில் ஒன்று ‘கைகளைக்கழு​வுதல்.’ தன் சுத்தத்​தின் முதல்​படி​யான கை கழு​வும் பழக்​கத்தை தற்​போது பலரும் தொட​ராமல் விட்​டு​விட்​டோம். கை கழு​வுதலின் மூல​மாக, வயிற்​றுப்​போக்​கு, கால​ரா, டைபாய்டுஆகிய​வற்​றி​லிருந்து நம்மை தற்​காத்​துக்​கொள்ள முடி​யும்.

`டெட்​டால் பநேகா ஸ்வஸ்த் இந்​தி​யா’​வின் ‘சுத்​தம் சுகா​தா​ரம்’ திட்ட வழி​காட்​டு​தலின்​படி, 20 விநாடிகளுக்கு நம் கைகளை நன்​றாகக் கழுவ வேண்​டும் என்​பதை குழந்​தைகள் மனதில் பதிய வைக்​கும் நோக்​கில், 17 வாரங்​களுக்கு குழந்​தைகளுக்​கான சுகா​தார விழிப்​புணர்​வுத் தொடர் வரும் வரும் 5-ம் தேதி (புதன்​கிழமை) முதல் வெளிவர​வுள்​ளது. இந்த சிறப்​புப் பக்​கத்​தில்சுகா​தார விளக்​கப் படங்​கள், குறுக்​கெழுத்​துப் போட்​டி, வண்​ணம் தீட்​டு​தல், பரிசுக்​கான போட்​டிக் கேள்வி​கள் ஆகியவை இடம்​பெற உள்​ளன. இதில் கேட்​கப்​படும் கேள்வி​களுக்​குப் பதில் அளிக்​கும் முதல் 100 மாணவர்​களுக்கு வாரந்​தோறும்​ பரிசுகள்​ வழங்​கப்​படும்​.

பெற்றோர், ஆசிரியர்கள் கவனத்துக்கு… பெற்றோர், தங்கள் குழந்தைகளிடம் நல்ல சுகாதார பழக்க வழக்கங்களை சுவையான விளையாட்டுகளின் மூலமாக கொண்டுசெல்ல உதவும் இந்த சுகாதார செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். உங்கள் குழந்தைகளுக்காக சிறிதுநேரம் ஒதுக்கி, இந்தப் பக்கத்தை அவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள். ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளின் அறிவிப்புப் பலகைக ளில் இந்த தொடரை வைத்து, இந்த திட்டத்தைப் பின்பற்ற தங்கள் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *