டென்னிஸ்: செரீனா, ப்ரையன் சகோதரர்கள் சாதனை

Spread the love

வெற்றிக் களிப்பில் செரீனா வில்லியம்ஸ்

பட மூலாதாரம், Getty

படக்குறிப்பு, வெற்றிக் களிப்பில் செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது 18 ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

நியூயார்க் நகரின் ஃப்ளஷிங் மெடோஸ் விளையாட்டு அரங்கில் ஞாயிறு இரவு நடைபெற்ற, அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அவர் டென்மார்க்கின் கேரலைன் வோசினாஸ்கியை 6-3,6-3 எனும் நேர் செட்டுகளில் வென்றார்.

இதையடுத்து 32 வயதான செரீனா, உலகளவில் மகளிர் பிரிவில் அதிக கிரண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர்களின் பட்டியலில், நான்காவது இடத்தை கூட்டாகப் பெற்றுள்ளார்.

தற்போது உலகளவில், மகளிர் பிரிவில் அதிக அளவு கிராண்ட் ஸ்லாம் பெற்றவர்களின் பட்டியலில் முதலிடத்தில் 24 பட்டங்களுடன் ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டும், இரண்டவது இடத்தில் 22 பட்டங்களுடன் ஜெர்மனியின் ஸ்டெஃபி கிராஃபும் உள்ளனர்.

19 பட்டங்களை வென்றுள்ள அமெரிக்காவின் ஹெலன் வில்ஸ் மூடி மூன்றாவது இடத்திலுள்ளார். செரீனா வில்லியம்ஸ், மார்ட்டினா நவ்ரோட்டிலோவா மற்றும் கிறிஸ் எவர்ட் லாயட் ஆகியோர் 18 பட்டங்களை வென்றுள்ளனர்.

ப்ரையன் சகோதரர்கள்

பட மூலாதாரம், Getty

படக்குறிப்பு, ப்ரையன் சகோதரர்கள்

இதனிடையே அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்றுள்ள ப்ரையன் சகோதரர்களும் ஒரு சாதனையைப் படைத்துள்ளனர்.

இருவரும் இணைந்து அந்தப் போட்டியில் வென்றதன் மூலம், 100 போட்டிகளில் இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளனர்.

வேறு எந்த இரட்டையர் ஜோடியும் இப்படியான ஒரு சாதனையைப் படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *