டென்னிஸ் வீராங்கனையை மணந்தார் நீரஜ் சோப்ரா!

Dinamani2f2025 01 202ffv9ute0g2fani20250120031528.jpg
Spread the love

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனையை மணமுடித்துள்ளார்.

பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் இந்தியாவுக்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கத்தையும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று கொடுத்தவர். இந்த நிலையில், அவர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

ஹரியாணா மாநிலம், சோனிப்பட்டைச் சேர்ந்த ஹிமானி மோர் என்ற பெண்ணை மணமுடித்துள்ளார்.

இதனை நீரஜ் சோப்ரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் திருமணம் தொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்பு இந்த திருமணம் ரகசியமாக நடைபெற்றுள்ளது.

மா்ம காய்ச்சல் உயிரிழப்பு 17-ஆக உயா்வு: ரஜௌரி விரைந்த மத்திய குழு

டென்னிஸ் வீராங்கனையான ஹிமானி விளையாட்டு மேலாண்மை படிப்பை தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறார்.

திருமணத்தைத்தொடர்ந்து நீரஜ் சோப்ராவுக்கு ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

அதில் ஹிமானியுடனான நீரஜ் சோப்ராவின் பயணம் அழகான நினைவுகளால் நிரப்பப்படட்டும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *