டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார்.
குற்றச் செயல்களை டெலிகிராம் செயலியின் வழியே நடைபெறுவதை தடையின்றி அனுமதிப்பதாகப் பதிவான வழக்கில் பாவெல் துரோவ் கைது பிரான்ஸ் நாட்டின் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
பிரான்ஸ் விமான நிலையத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட பாவெல் துரோவ், ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
39 வயதான துரோவ், பணமோசடி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஆபாசப் பதிவுகளை பகிர்வதற்கு டெலிகிராம் செயலியை பயன்படுத்துவதற்கு ஆதரவாக இருந்த குற்றத்திற்காக பிரான்ஸ் அரசு கைது உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில் அஜர்பைஜான் நாட்டிற்கு தனி விமானம் மூலம் சென்றுக்கொண்டிருந்தபோது, பொர்காட் விமான நிலையத்தில் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளார்.