டெல்டாவில் கனமழையால் நெற்பயிர்கள் பெரும் சேதம்: ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை | Heavy rains in Delta cause damage to paddy crops CM consults with Collectors

1380458
Spread the love

சென்னை: டெல்டா மாவட்​டங்​களில் கடந்த சில நாட்​களாக பெய்து வரும் மழை​யால் நெற்​ப​யிர்​கள் பெரும் சேதம் அடைந்​துள்​ளன. இதனால் டெல்டா மாவட்​டங்​களில் ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​கள் மற்​றும் முன்​னேற்​பாடு​கள் குறித்து அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காணொலி​யில் ஆய்வு செய்​தார்.

கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கிய நிலை​யில் அன்று முதல் 3 நாட்​களில் தமிழகத்​தில் பரவலாக மழை பெய்​தது. கடந்த 19-ம் தேதி மாநில அவசர கால செயல்​பாட்டு மையத்​தில் இருந்து திரு​வாரூர், தென்​காசி, விருதுநகர், ராம​நாத​புரம், தேனி, கோயம்​புத்​தூர் மற்​றும் நீல​கிரி ஆகிய மாவட்​டங்​களில் கனமழை பாதிப்​பு​கள், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் குறித்து ஆட்​சி​யர்​களு​டன் முதல்​வர் ஸ்டா​லின் ஆலோ​சனை நடத்தி பல்​வேறு அறி​வுறுத்​தல்​களை வழங்​கி​னார்.

இதைத்​தொடர்ந்து சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்​டங்​கள் மற்​றும் டெல்டா மாவட்​டங்​களான மயி​லாடு​துறை, நாகப்​பட்​டினம், திரு​வாரூர், தஞ்​சாவூர் ஆகிய மாவட்​டங்​களில் கனமழை​யால் ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​கள் குறித்​தும், மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள முன்​னேற்​பாடு​கள் குறித்​தும் அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காணொலி​யில் நேற்று ஆய்வு செய்​தார்.

ஆய்வு நடத்​திய மாவட்​டங்​களில் சராசரி​யாக 56.61 மி.மீ. மழை பெய்​துள்​ள​தால், மழை​யால் பாதிப்பு ஏற்​பட்​டால் மக்​கள் தங்​கு​வதற்​காக முகாம்​களை தயார் நிலை​யில் வைத்​திருக்​க​வும் முகாம்​களில் உணவு, குடிநீர், மருத்​துவ வசதி​கள் உள்​ளிட்ட அனைத்து வசதி​களை​யும் ஏற்​பாடு செய்​ய​வும் முதல்​வர் அறி​வுறுத்​தி​னார். சென்​னை​யில் முன்​னேற்​பாடு​கள் குறித்து கேட்ட முதல்​வர், மழைநீர் தேங்​கும் பகு​தி​களில் கூடு​தல் கவனம் செலுத்த கேட்​டுக் கொண்​டார்.

இக்​கூட்​டத்​தில், நெல் கொள்​முதல் சேமிப்​பு, நகர்வு மற்​றும் அரவை குறித்​தும் ஆய்வு செய்த முதல்​வர் மயி​லாடு​துறை, நாகப்​பட்​டினம், திரு​வாரூர் மற்​றும் தஞ்​சாவூர் ஆகிய மாவட்ட விவ​சா​யிகள் பாதிக்​காத வகை​யில் நெல் கொள்​முதலை தொய்​வின்றி நடத்​த​வும், மழை​யால் நெல் மூட்​டைகள் சேதம் அடை​யாமல் பாது​காக்கும் நடவடிக்​கைகளை துரிதப்​படுத்​த​வும் முதல்​வர் உத்​தர​விட்​டார். நெல்​லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்​தில் இருந்து 22 சதவீத​மாக தளர்த்த மத்​திய அரசுக்கு தமிழக அரசு முன்​மொழிவு அனுப்​பி​யுள்ள நிலை​யில் இதற்கு விரை​வாக நடவடிக்கை எடுக்க அதி​காரி​களிடம் தெரி​வித்​தார்.

காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி​: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நேற்று உரு​வானது. அது நேற்றே ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி​யாக வலுப்​பெற்று மேற்​கு-வடமேற்கு திசை​யில் நகர்ந்​தது. இன்று தென்​மேற்கு மற்​றும் அதையொட்​டிய மத்​திய மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில், வடதமிழக – புதுவை – தெற்கு ஆந்​திர கடலாரப் பகு​தி​களுக்கு அப்​பால் காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெறக் கூடும். அடுத்த 24 மணி நேரத்​தில் மேற்​கு-வடமேற்கு திசை​யில் நகர்ந்து மேலும் வலு​வடையக் கூடும்.

இன்று விழுப்​புரம், செங்​கல்​பட்​டு, கடலூர், மயி​லாடு​துறை மாவட்​டங்​கள் மற்​றும் புது​வை​யில் சில இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ஓரிரு இடங்​களில் அதி கனமழை​யும், சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், ராணிப்​பேட்​டை, திரு​வண்​ணா​மலை, கள்​ளக்​குறிச்​சி, அரியலூர், பெரம்​பலூர், தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம் மாவட்​டங்​கள் மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் சில இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், சேலம், திருச்​சி, வேலூர், திருப்​பத்​தூர், தரு​மபுரி மற்​றும் புதுக்​கோட்டை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில்​ கனமழை​யும்​ பெய்​ய வாய்ப்​புள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை – சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்ததால் செங்கை, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 100 கன அடி உபரிநீர் மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டு வருவதால் யாரும் அடையாறு ஆற்றுக்குள் இறங்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது என்று நீர்வளத் துறையினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏரி மொத்தம் 25.51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது. ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகவும், அதன் நீரின் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் அலுவலர்கள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு முறை நீரை அளவீடு செய்து வருகின்றனர். மேலும், தற்போது அதிகப்படியான நீர் வந்து கொண்டிருப்பதால் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்பு நேற்று மாலை மதகுகளின் வழியே 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *