டெல்டா மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத முதல்வர்: பாஜக மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு | BJP state general secretary alleges that the cm has not taken steps to protect the delta people

1380336
Spread the love

நாகப்பட்டினம்: ​தான் டெல்​டா​காரன் என்று பெரு​மை​யாக கூறிக் கொள்​ளும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், டெல்டா பகுதி மக்​களைப் பாது​காக்க எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என்று பாஜக மாநிலப் பொதுச் செய​லா​ளர் கருப்பு முரு​கானந்​தம் கூறி​னார்.

நாகப்​பட்​டினத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அனை​வரும் தீபாவளிப் பண்​டிகையை கொண்​டாட உள்ள நிலை​யில், டெல்டா மாவட்ட விவ​சா​யிகள் மட்​டும் தீபாளியை சிறப்​பாகக் கொண்​டாட முடி​யாத நிலை​யில் உள்​ளனர். அரசு கொள்​முதல் கிடங்​கு​கள் போதிய அளவில் இல்​லாத​தா​லும், வழக்​கத்​தை​விட 3-ல் ஒரு பங்கு மட்​டுமே கொள்​முதல் செய்​யப்​படு​வ​தா​லும் விளைந்த நெல் மணி​கள் மழை​யில் நனைந்​து, முளைத்து வரு​கின்​றன. இதனால், குறுவை சாகுபடி செய்த விவ​சா​யிகளின் வாழ்வு கேள்விக்​குறி​யாக உள்​ளது.

உற்​பத்தி செய்த நெல்லை விற்க முடி​யாத நிலை விவ​சா​யிகளுக்கு மிக​வும் மோச​மானது. நெல்​லைக் கொள்​முதல் செய்ய அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. தமிழக அரசின் அக்​கறை​யின்​மை​யாலும், மெத்​தனப் போக்​காலும் நாகை, தஞ்​சை, திரு​வாரூர் பகுதி விவ​சா​யிகள் பல்​வேறு இன்​னல்​களை சந்​தித்து வரு​கின்​றனர்.

வீண் விளம்​பரத்​துக்​காக செலவு செய்​யும் திமுக அரசு, விவ​சா​யிகளுக்​குத் தேவை​யான கொள்​முதல், சேமிப்பு மற்​றும் பதப்​படுத்​தும் நிலை​யங்​களை அமைக்​காத​தால் விவ​சா​யிகள் பெரும் நஷ்டத்தை சந்​தித்து வரு​கின்​றனர். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தன்னை டெல்​டா​காரன் என்று பெரு​மை​யாக சொல்​லிக் கொள்​கிறார். ஆனால், டெல்டா விவ​சா​யிகள் மற்​றும் பொது​மக்​களைப் பாது​காக்க எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. இவர் எப்படி தமிழக மக்களை பாதுகாப்பார்? இவ்​வாறு அவர் கூறி​னார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *