டெல்லியில் சிபிஐ முன்பு ஆஜராகும் தவெக தலைவர் விஜய்; என்ன நடக்கப்போகிறது? |TVK Leader Vijay to Appear Before CBI in Delhi – What’s Likely to Happen Next?

Spread the love

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சிபிஐ முன்பு ஆஜராகவிருக்கிறார். இதற்காக காலை 7 மணிக்கே தனி விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டிருக்கிறார். காலை 11 மணிக்கு விஜய் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவிருக்கிறார்.

இந்நிலையில், விஜய்யிடம் குறைந்தபட்சம் இரண்டு நாள்களுக்காகவது விசாரணை நடத்தப்படும் எனத் தகவல் சொல்கின்றனர் உளவுத்துறையினர்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூறிய பதில்களை வைத்துக்கொண்டு விஜய்யிடம் குறுக்குக் கேள்விகளும் கேட்கப்படும் என்கின்றனர்.

கரூர் விவகாரத்தில் பாஜகவினர் விஜய்க்கு முழுமையாக ஆதரவு தெரிவித்தபோதும், அவர் பதிலுக்கு எந்தக் க்ரீன் சிக்னலையும் காட்டவில்லை. சிறப்புப் பொதுக்குழு ஒன்றைக் கூட்டி மீண்டும் தானே முதல்வர் வேட்பாளர் எனத் தீர்மானம் போட்டுக்கொண்டார்.

திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை ஓரணியில் இணைக்க நினைக்கும் பாஜகவின் கனவுக்கு விஜய் தடையாக இருப்பதால் சிபிஐ விசாரணையும் அதன் நடைமுறைகளும் விஜய்க்கு அத்தனை எளிதாக இருக்கப்போவதில்லை என்கின்றனர் அரசியலை உற்றுநோக்குபவர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *