டெல்லி கணேஷ், சி. ஆர். சரஸ்வதிக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது!

Dinamani2f2024 09 082f7chbyh3t2fscreenshot202024 09 0820162303.png
Spread the love

நடிகர்கள் டெல்லி கணேஷ் மற்றும் சி. ஆர். சரஸ்வதி ஆகியோருக்கு கலையுலக வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக, திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகாரில் நிரூபிக்கப்படுபவர்கள் சினிமாவில் பணியாற்ற 5 ஆண்டு வரை தடை விதிக்கப்படும் என தீர்மானித்துள்ளனர்.

மேலும், நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், அதை அடுத்த 3 ஆண்டுக்கு நீட்டித்துள்ளனர்.

நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பொருளாளர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

இறுதியாக, நடிகர்கள் டெல்லி கணேஷ் மற்றும் சி. ஆர். சரஸ்வதி ஆகியோருக்கு ’கலையுலக வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *