பாராளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டமாக நடைபெறுகிறது. இதல் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் வரிந்து கட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்க ஒவ்வொரு மாநிலத்திலும் அதிரடி வியூகங்கள் அமைத்து உள்ளது.
காங்கிரஸ் கூட்டணி
கடந்த முறையை விட கூடுதல் இடங்களை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இதேபோல் காங்கிரஸ் கட்சியும் பா.ஜனதாவை தோற்கடிக்க மாநில கட்சிகளுடன் இறங்கி வந்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி முக்கிய மாநிலங்களில் குறைந்ந இடங்களில் போட்டியிடுகின்றன.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் சிலரிடையே எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இதனை காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வந்தது.
ராஜினாமா
இந்த நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி திடீரென தனது கட்சி பதவியில் இருந்து ராஜினாமா செய்து உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து உள்ள நிலையில் இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே அவரது ராஜினாமா முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லி காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் கட்சி மேலிடம் ஈடுபட்டு உள்ளது.
ohoho