புதுடெல்லி:
டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த வெடிப்புச் சம்பவத்தில்10 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது வெடி விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள எல்.என்.ஜே.பி. மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். கார் வெடித்துச் சிதறிய இடத்தின் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ, கார்கள் உள்ளிட்ட பிற வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.

ஆய்வு
விபத்து நடந்த மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

