"டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

Spread the love

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன.

அந்தவகையில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்கிற பிரச்சாரத்தை இன்று (டிச.10) திமுக தொடங்கியிருக்கிறது.

'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பிரச்சாரம்
‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பிரச்சாரம்

ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இதனைத் தொடங்கி வைத்திருக்கிறார். பூத் கமிட்டி அளவில் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றும் விதமாக இந்த பிரச்சாரத்தை திமுக கையில் எடுத்திருக்கிறது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?

டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!

அமித்ஷா
அமித்ஷா

தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!” என்று ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *