வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கியது.
இதில் பாகிஸ்தான் அணி முதல்நாளில் 158/4 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 2022இல் அறிமுகமானார் சௌத் ஷகீல். இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1024 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட்டில் 1 இரட்டை சதம், 2 சதங்கள், 7 அரைசதங்கள் அடித்துள்ளார். சராசரி 64 என்பது குறிப்பிடத்தக்கது.
28 வயதாகும் சௌத் ஷகீல் இன்று வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து (57*) ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இந்த அரைசதம் மூலம் டெஸ்டில் 1000 ரன்களை கடந்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர்களில் வேகமாக 1000 ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அதாவது 20 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பாக சயீத் அகமது இந்த சாதனையை படைத்துள்ளார்.
பாகிஸ்தானில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்தவர்கள் பட்டியல்:
1. சௌத் ஷகீல் -20 இன்னிங்ஸ்
2. சயீத் அகமது – 20 இன்னிங்ஸ்
3. சதீக் முகமது – 22 இன்னிங்ஸ்
4. ஜாவேத் மியான்டத் – 23 இன்னிங்ஸ்
5. டௌபிக் உமர் – 24 இன்னிங்ஸ்
6. அபித் அலி – 24 இன்னிங்ஸ்
7. அப்துல்லா ஷபீக்கு – 24 இன்னிங்ஸ்