இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க விரும்புவதாக ஸ்ரேயாஸ் ஐயர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ரஞ்சி கோப்பை எலைட் தொடரில் மகாராஷ்டிரத்துக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசி அசத்தினார். அவர் 190 பந்துகளில் 142 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
29 வயதாகும் ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஆண்டு முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது சிவுப்பு பந்து போட்டிகளில் தனது முதல் சதத்தை அவர் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பாக, கடந்த 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்திருந்தார்.