இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் என பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு மிகப் பெரிய தோல்விகளை சந்தித்துள்ளது. முதலாவதாக, சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இந்திய அணி முழுமையாக இழந்தது. இதன் மூலம், சொந்த மண்ணில் 12 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வந்த இந்திய அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
இரண்டாவதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மிக முக்கியமான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம், பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழந்தது மட்டுமில்லாமல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்தது.