டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்! | DAC developers appoints AR Rahman as Brand ambassador

Spread the love

தரமான கட்டுமானம், வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட வளர்ச்சி ஆகியவற்றிற்காக அறியப்பட்ட, வேகமாக வளர்ந்து வரும் கட்டுமான நிறுவனமாகிய டேக் டெவலப்பர்ஸ் (DAC Developers), புகழ்பெற்ற இசையமைப்பாளரும், சர்வதேச இசைக் கலைஞருமாகிய இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானைத் தமது விளம்பரத் தூதராக அறிவித்தது.

மேஸ்ட்ரோ ஏ.ஆர். ரஹ்மான் முன்னிலையில் சுமார் 1,000 புதிய வீடுகள் கொண்ட ஐந்து குடியிருப்புத் திட்டங்கள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இக்குடியிருப்புத் திட்டங்கள், போரூர் அருகேயுள்ள காட்டுப்பாக்கம், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்குவார்சத்திரம், போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகேயுள்ள குமணன்சாவடி, ஓ.எம்.ஆர்.-இல் உள்ள சோழிங்கநல்லூர் மற்றும் சிறுசேரி ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ளன.

டேக் நிறுவனம் ஒரு நவீன, நம்பகமான மற்றும் சர்வதேச மதிப்பு கொண்ட பிராண்டாகத் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள இந்த டேக் டெவலப்பர்ஸ் – ஏ.ஆர். ரஹ்மான் இணைவு பெரும் உந்து சக்தியாக இருக்கும். மேலும் டேக் நிறுவனத்தின் புதுமை, நேர்மை மற்றும் உலகத்தரம் வாய்ந்த கட்டுமானத் தரங்களுக்கான உறுதிப்பாட்டை இந்த இணைவு வலுப்படுத்தும்.

டேக் டெவலப்பர்ஸ் | ஏ.ஆர். ரஹ்மான்

டேக் டெவலப்பர்ஸ் | ஏ.ஆர். ரஹ்மான்

இது குறித்துப் பேசிய டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் எஸ். சதீஷ் குமார், “எங்களது டேக் குடும்பத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானை வரவேற்பதில் உண்மையிலேயே பெருமை கொள்கிறோம். நாங்கள் வெறும் கட்டமைப்புகளை மட்டும் கட்டாமல், வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்தும் வகையில் மகிழ்ச்சியான இல்லங்களை உருவாக்குகிறோம். படைப்பாற்றல், துல்லியம் மற்றும் அளவிடற்கரிய திறமைக்காக உலகளவில் கொண்டாடப்படும் அவர், புதுமை, நேர்மை மற்றும் காலத்தால் அழியாத திறமையான கட்டுமானத்திற்காக நாங்கள் கொண்டிருக்கும் விழுமியங்களை உள்ளடக்கியவராகத் திகழ்கிறார். இந்திய மதிப்புகளில் வேரூன்றி, உலகளவில் அங்கீகாரம் பெற்ற அவரது பயணம், நீண்டகால மதிப்புடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த கட்டுமானங்களை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது” என்று கூறினார்.

இந்த இணைவு குறித்து தனது எண்ணங்களை வெளிப்படுத்திய ஏ.ஆர். ரஹ்மான், “நம் கனவுகள் அனைத்தும் உருவாகும் இடம் வீடுதான். தென் இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாகிய டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் ஒரு இனிமையான புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதயத்திலிருந்து இசையை உருவாக்குவதைப் போல, அன்புடன் அழகான வீடுகளை உருவாக்கும் குழுவை நான் டேக் நிறுவனத்தில் காண்கிறேன். ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி பொங்கும் வகையில் வீடுகளைக் கட்டிவரும் டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் விழுமியங்களை நான் மதிக்கிறேன்” என்று தெரிவித்தார். 

டேக் டெவலப்பர்ஸ் நிறுவனம் வரவிருக்கும் நாட்களில், ஏ.ஆர். ரஹ்மானை பிராண்ட் அம்பாஸடராகக் கொண்டு டிஜிட்டல், பிரிண்ட், ஹோர்டிங்ஸ் மற்றும் டி.வி. விளம்பரங்களை வெளியிடவுள்ளது. நம்பகத்தன்மை, சிறந்த வடிவமைப்பு மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்றவாறு வாழும் இல்லங்களைத் தேடும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் டேக் நிறுவனத்தின் நற்பெயரை வலுப்படுத்த இந்த முயற்சி உதவும். 

டேக் டெவலப்பர்ஸ் பற்றி

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி கட்டுமான நிறுவனமாகிய டேக் டெவலப்பர்ஸ், 2014-ல் நிறுவப்பட்டது. இது வாழ்க்கை முறையை மேம்படுத்தும் தரமான வீடுகளை உருவாக்குவதில் 12 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்டுள்ளது. நியாயமான விலையில் அத்தியாவசிய ஆடம்பரங்களை வழங்குவதில் கடமைப்பட்டுள்ள டேக் டெவலப்பர்ஸ், அவற்றின் அழகுணர்ச்சி, அத்தியாவசிய வசதிகளுக்கான அணுகல்தன்மை ஆகியவற்றால் அறியப்படுகிறது. வீடு வாங்குபவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு குடியிருப்புத் திட்டமும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு, வசதியையும் நிம்மதியையும் ஒருசேர வழங்குகிறது. வெளிப்படைத்தன்மை, வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் உயர்தர கட்டுமானத் தரங்களில் கவனம் செலுத்தி, இந்நிறுவனம் இதுவரை 110-க்கும் மேற்பட்ட குடியிருப்புத் திட்டங்கள், 45 லட்சம் சதுர அடிக்கு மேல் கட்டுமானம் மற்றும் 3000-க்கும் அதிகமான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களுடன் நகர்ப்புற வாழ்க்கை அனுபவங்களை மறுவரையறை செய்து வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *