டேங்கர் ரயில் தீ விபத்து: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

dinamani2Fimport2F20212F42F62Foriginal2Fnk 6 bus 0609chn 122 8
Spread the love

திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னை எண்ணூரிலிருந்து மும்பைக்கு எண்ணெய் ஏற்றிக் கொண்டு, சுமார் 45 டேங்கர்களுடன் சென்று கொண்டிருந்த ரயிலில், திடீரென டேங்கர் பெட்டியொன்றில் தீப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த பெட்டிகளில் தீ பரவிக் கொண்டிருக்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் நலன் கருதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரக்கோணம், திருவள்ளூரில் சென்னைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Special buses are being operated as suburban train services have been affected due to a fire in a tanker train carrying crude oil near Thiruvallur.

இதையும் படிக்க: டேங்கர் ரயில் தீ விபத்து: சென்னை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *