1997-ம் ஆண்டு வெளியான டைட்டானிக் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
கடலில் செல்லும் சொகுசு கப்பல் மூழ்கும் கதையில் அழகாக காதல் மற்றும் எமோசனல் விஷயங்களை அழகாக டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் காட்டி இருப்பார்.
மரணம்
இந்த படத்தில் அனைவராலும் பெரிதும் பேசப்பட்டத கப்பல் கேப்டன் எட்வர்ட் ஸ்மித் கதாபாத்திரம். இதில் பிரபல நடிகர் பெர்னார்டு ஹில் நடித்து அசத்தி இருப்பார்.
இந்த நிலையில் நடிகர் பெர்னார்டு ஹில் இன்று தனது 79 வயதில் மரணம் அடைந்தார். அவருக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் பெர்னார்டு ஹில் இங்கிலாந்தில் உள் மான்செஸ்டரில் பிறந்தவர் ஆவார். அவர் ஆரம்பத்தில் புகழ்பெற்ற பி.பி.சி.தொலைக்காட்சியில் வெளியான “பாய்ஸ் ப்ரம் பிளாக்ஸ்டப் என்ற நாடகத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.
டைட்டானிக்- தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்
இதன் பின்னர் 1980 ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் லிவர்பூல் என்ற திரைப்படத்தில் வேலையின்மையுடன் போராடும் கதாபாத்திரத்தில் நடித்தார். இது அவரது நடிப்பு திறமைக்கு அங்கீகாரத்தை அளித்தது.
எனினும் ஜேம்ஸ்கேமரூனின் டைட்டானிக் படத்தில் கப்பல் கேப்டன் மற்றும் தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்தில் மன்னன் தியோடனாக வாழ்ந்து தனது நடிப்பு திறமையைகாட்டி இருப்பார். இந்த 2 படங்களும் அவரது நடிப்பை உச்சத்தில் கொண்டு போய் வைத்தது குறிப்பிடத்தக்கது.