டைட்டில் வென்ற வில்லன் நடிகர்! நிறைவு பெற்றது டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2!

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “டாப் குக்கு டூப் குக்கு’ இரண்டாவது சீசனில் டைட்டில் வென்றிருக்கிறார் நடிகர் பெசன்ட் ரவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘குக்கு வித் கோமாளி’யைத் தயாரித்து வந்த மீடியா மேஷன்ஸ் நிறுவனம் அங்கிருந்து வெளியேறி கடந்தாண்டு சன் டிவிக்கு வந்து ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியைத் தயாரித்தது நினைவிருக்கலாம். வெங்கடேஷ் பட் நடுவர்களில் ஒருவராகக் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள் ராகேஷ் மற்றும் ஷிவாங்கி.

பெசன்ட் ரவி

பெசன்ட் ரவி

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒளிபரப்பாகத் தொடங்கியது.

நடிகைகள் கிரண், ஷிவானி, டெல்னா டேவிஸ், பிரியங்கா, நடிகர்கள் பெசன்ட் ரவி, ரோபோ சங்கர், வாகீசன் உள்ளிட்டோர் குக்குகளாகவும், கமலேஷ், மோனிஷா ப்ளெஸ்ஸி, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் டூப் குக்குகளாகவும் கலந்துகொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *