டோலிவுட்டில் தடம் பதிக்கும் கார்த்தி; ரெடியாகும் சர்தார் 2 டீசர்; 'மார்ஷல்' கிளைமாக்ஸ்! – அப்டேட்!

Spread the love

கார்த்தியின் ‘மார்ஷல்’ படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நோக்கி செல்வதால், அவரது அடுத்த படம் குறித்த பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. ‘வா வாத்தியார்’ படத்தை அடுத்து திரைக்கு வரும் படமாக ‘சர்தார் 2’ ரெடியாகி வருகிறது. ‘மார்ஷ’லின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே நடக்கிறது.. கார்த்தியின் 30வது படம் எது? ‘கைதி 2’ அப்டேட் என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

mad

கார்த்தியின் 28வது படமான ‘சர்தார் 2’வை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இதன் திரைக்கதையை இயக்குநர் ரத்னகுமார், ஆஷாமீரா ஐயப்பன், விக்னேஷ் முனியாண்டி ஆகியோர் எழுதியுள்ளனர். டிஜிட்டல் யுகத்திற்கான உளவுக் கதை இது. இந்த படத்தில் கார்த்தியுடன், எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், அஷிகா ரங்கநாத், யோகிபாபு, பாபு ஆண்டனி என பலரும் நடிக்கின்றனர். ‘சர்தார்’ போல இதிலும் ஹீரோ இரண்டு தோற்றங்களில் வருகிறார். சாம் சி.எஸ்.இசையமைத்துள்ளார். கார்த்தியின் பிறந்த தினமான மே மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகின்றனர். முன்னதாக ஏப்ரலில் டீசர் வருகிறது.

karthi

இதனை தொடர்ந்து ‘டாணாக்காரன்’ தமிழின் இயக்கி வரும் ‘மார்ஷல்’ படப்பிடிப்பில் இருக்கிறார் கார்த்தி. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். தவிர சத்யராஜ், சேத்தன், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கன், ஈஸ்வரிராவ் என பலரும் நடிக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு, சாய் அபயங்கர் இசை என பக்கா டீம் அமைந்துள்ளது. இது 1960 காலகட்டங்களில் நடக்கும் பீரியட் படமாகும். இதன் முதல் இரண்டு ஷெட்யூல்கள் ராமேஸ்வரம், காரைக்கால் கடற்பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது. இலங்கை கடற்பகுதியில் நடந்த, கடற்கொள்ளையர்கள் பற்றிய கதை இது என்றும் சொல்கிறார்கள்.

இயக்குநர் தமிழ்

‘மார்ஷ’லின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடர்கிறது. கிளைமாக்ஸ் போர்ஷனை எடுக்க உள்ளனர் என்கிறார்கள். இப்போது அங்கே செட் ஒர்க்குகள் மும்முரமாக நடந்து வருவதால், இம்மாத இறுதியில் ஷூட்டிங்கை எதிர்பார்க்கலாம். இந்த ஷெட்யூலோடு படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மார்ஷல்’ படத்தை அடுத்து தெலுங்கு, தமிழில் ஒரு படம் செய்கிறார் கார்த்தி. தெலுங்கில் வெளியான ‘mad’,’Mad Square’சீக்குவலை இயக்கிய கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் நேரடி தெலுங்கில் கார்த்தி நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. வெங்கி அட்லூரி – சூர்யா கூட்டணியின் ‘சூர்யா 26’ படத்தை தயாரித்த நிறுவனமே கார்த்தியின் படத்தை தயாரிக்கும் என்றும், சூர்யா படம் போல இதுவும் தமிழில் வெளியாகும் என்கிறார்கள். ஏப்ரலில் படப்பிடிப்பு தொடக்கும் என்ற பேச்சு இருக்கிறது.

அதை போல லோகேஷ் கனகராஜ் இப்போது அல்லு அர்ஜூனை இயக்க உள்ளதால், அந்த படத்தை முடித்துவிட்டு ‘கைதி 2’வுக்குள் வருவார் என்றும் தகவல்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *