ட்ரம்பின் 48 மணிநேர கெடு: 'எங்கள் நாட்டைக் காக்க ஒரு நிமிடம்கூட யோசிக்கமாட்டோம்' – ஈரான் அதிரடி

Spread the love

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் ஆறாவது வாரத்திற்குள் நுழைந்துள்ளது.

இந்தப் போர் முடிவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

ட்ரம்ப் பதிவு

இந்த நிலையில், நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுக்கு 48 மணிநேர கெடு குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், “ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கவும் ஈரானுக்கு 10 நாள் கால அவகாசம் கொடுத்திருந்தேன்.

நேரம் சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் 48 மணிநேரத்தில் அவர்கள் மீது நரகம் விழும்” என்று பதிவிட்டிருந்தார்.

ஈரானின் ஜெனரல் அலி அப்துல்லாஹி அலியாபாடி
ஈரானின் ஜெனரல் அலி அப்துல்லாஹி அலியாபாடி

ஈரான் பதில்

இந்தப் பதிவிற்கு ஈரானின் ஜெனரல் அலி அப்துல்லாஹி அலியாபாடி பதிலளித்துள்ளார்.

“ஈரான் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஏதாவது தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்காவின் ராணுவ சொத்துகள் மீதும், இஸ்ரேலின் கட்டமைப்புகள் மீதும் கடுமையான மற்றும் தொடர்ச்சியான தாக்குதல் நடக்கும்.

தொடர் தோல்விகளை ஒப்புக்கொண்ட பின்னர், ஆக்கிரமிப்பு மற்றும் போரைத் தூண்டும் மனப்பான்மை கொண்ட அமெரிக்க அதிபர் விரக்தி, பதட்டம் மற்றும் முட்டாள்தனமாக ஈரானின் உள்கட்டமைப்பு மற்றும் தேசிய சொத்துக்களைத் தாக்குவதாக அச்சுறுத்தியுள்ளார்.

அப்படி நடந்தால் ஈரானின் உரிமை மற்றும் தேசிய நலனைக் காக்க ஈரானின் ராணுவம் ஒரு நிமிடம்கூட யோசிக்காது” என்று கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *