அடுத்தது, கிரீன்லேண்டில் எண்ணெய் வளம் உள்ளது. ஏற்கெனவே, வெனிசுலாவை ட்ரம்ப் எண்ணெய் வளத்திற்காக தான் பிடித்துள்ளார் என்பது உலகம் அறிந்த ரகசியம்.
அப்போது, அவர் கிரீன்லேண்டை விட்டு வைக்க வாய்ப்பே இல்லை.
கடைசியாக… ஆனால், முக்கியமாக… ட்ரம்ப் அரசியல்வாதி என்பதை தாண்டி, அடிப்படையில் அவர் ஒரு பிசினஸ்மேன். கிரீன்லேண்டை அவர் ஒரு ‘பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக’ பார்க்கிறார்.
கிரீன்லேண்டை அடைவது மூலம் அமெரிக்காவை இன்னும் பெரிதாக்கலாம். அங்கேயும் முதலீடுகளைக் குவிக்கலாம் என்பது அவருடைய எண்ணம்.
இத்தனை ப்ளஸ்கள் கொட்டி உள்ள கிரீன்லேண்டை ட்ரம்ப் ‘மிஸ்’ செய்வாரா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.
கிரீன்லேண்டை விட்டுத்தராத நாடுகள்..!
தற்போது டென்மார்க்கிற்கு கீழ் உள்ளது கிரீன்லேண்ட். டென்மார்க் கிரீன்லேண்டை விட்டுத் தருவதாக இல்லை. கிரீன்லேண்ட் தாங்கள் தனி நாடாக இயங்கவே விரும்புகிறது.
அதனால், நேட்டோ நாடுகளான டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகள் ட்ரம்பின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்கின்றனர்.
இவர்களை வழிக்கு கொண்டு வர, வரும் 1-ம் தேதியில் இருந்து, நேட்டோ நாடுகளான டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவைகளின் மீது 10 சதவிகிதம் வரி விதித்துள்ளார்.