ட்ரம்ப் கருத்தால் சந்தை அதிர்ச்சி: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?|What Investors should do now in Volatile Market?

Spread the love

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்… எண்ணெய் விலை குறையும்… ஈரான் போர் விரைவில் முடியும் என்று அவ்வப்போது ட்ரம்ப் சொல்லும் போது, அனைத்து சந்தைகளும் ‘பச்சை’ நிறமாக மாறி நன்கு வர்த்தகம் ஆகின்றன.

அடுத்த நாளே, ஈரான் மீது தாக்குதல் தொடரும்… தாக்குதல் இன்னும் கடுமையாகும் என்று சொல்லும் போது, சந்தைகள் சரிவை சந்திக்கின்றன.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

“அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒவ்வொரு கருத்தாக கூறும்போது, அதற்கேற்ற மாதிரி பங்குச்சந்தை ஏற்றமும், இறக்கமும் காண்கிறது.

அவருடைய பாசிட்டிவ் கருத்தால், சந்தை ஏற்றத்தைக் கண்டால், உடனே அது ஏறுமுகம் என்று நினைத்துவிடக் கூடாது. அது ‘Relief Rally’ தான்.

அதனால், இந்த மாதிரியான சந்தையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

அடுத்ததாக, ஒவ்வொரு முதலீட்டையும் பார்த்துச் செய்ய வேண்டும்.

இப்போது இருக்கும் சந்தை ‘டிரேடிங்’கிற்கான சந்தை. அதனால், நீண்ட கால முதலீட்டிற்கு குறைந்த அளவில், குறைந்த தொகையில் பங்குகளை வாங்க வேண்டும். இதற்கு ‘Staggered Buying’ என்று பெயர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *