இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத பரஸ்பர வரி, 25 சதவீத கூடுதல் வரி என மொத்தம் 50 சதவீத வரியும் தொடர்ந்து இருந்து வருகிறது.
இப்படி இந்தியா மீது மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரும்பாலான உலக நாடுகள் மீது வரி விதித்துள்ளார். இந்த வரிக்கு எதிராக தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுந்துள்ளது.
டெபோரா ரோஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ட்ரம்ப் அவசர சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ள வரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இந்த வரிகளால் அமெரிக்க தொழிலாளர்கள், அமெரிக்க நுகர்வோர்கள், இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.