ட்ரம்ப் IEEPA வரி சட்டவிரோதம்: $133B ரீஃபண்ட்| Trump IEEPA Tariffs Cancelled: $133B Refund Twist

Spread the love

சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)-ன் கீழ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்த “வரி சட்டத்திற்கு புறம்பானது’ என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

இதனால், இன்றிலிருந்து இந்தச் சட்டத்திற்குக் கீழ், வரி வசூலிக்கப்படாது என்று அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

IEEPA சட்டத்தின் படி, இதுவரை அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட 133 பில்லியன் டாலர்கள் வரி வசூலித்துள்ளது.

ட்ரம்ப் - பரஸ்பர வரி

ட்ரம்ப் – பரஸ்பர வரி

அந்த மொத்த தொகையும் ரீஃபண்ட் செய்யப்பட உள்ளது. ‘ரீஃபண்ட் செய்ய தயார்’ என்று ஓபனாகவே அமெரிக்க அரசு அறிவித்துவிட்டது.

ஆனால், அது எப்படி, எப்போது ரீஃபண்ட் செய்யப்படும்… அதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி அமெரிக்க உச்ச நீதிமன்றமோ, அமெரிக்க அரசாங்கமோ வாயைத் திறக்கவில்லை.

அதனால், இதற்கான வழிமுறைகளை அமெரிக்காவின் கீழ் நீதிமன்றங்கள், அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம், அமெரிக்க சுங்கத் துறை ஆகியவை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *