ட்ரை கிளினிங் வேலை டு AI உலகின் ‘ராஜமாதா’ – அமெரிக்காவில் கலக்கும் சீனர் – யார் இந்த Fei-Fei Li?|Fei-Fei Li: China-Born Migrant to America’s ‘Queen of AI’

Spread the love

ஏ.ஐ-க்கே பயிற்சியளிக்கும் கருவி

2007-ம் ஆண்டு, லி தன்னுடன் வேலை பார்ப்பவர்களையும் சில மாணவர்களை இணைத்து ‘இமேஜ்நெட்’ என்கிற திட்டத்தை உருவாக்கினார். இது 14 மில்லியனுக்கும் அதிகமான லேபிள் இடப்பட்ட படங்களைக் கொண்டு மிகப்பெரிய தொகுப்பு ஆகும்.

இது தான் பின்னாளில் ஏ.ஐ-க்கே பயிற்சி அளிப்பதற்கான முக்கிய கருவியாக மாறியது.

இமேஜ்நெட் வருவதற்கு முன், ஏஐ படங்களில் உள்ள பொருள்களை புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டது. ஆனால், இமேஜ்நெட்டிற்கு பின், ஆப்ஜெக்ட் டிடெக்‌ஷன், முகம் அடையாளம் காணுதல் போன்ற பல விஷயங்கள் ஏஐ-க்கு ஈசியாகின.

'குயின் எலிசபெத்' பட்டம் பெற்ற போது

‘குயின் எலிசபெத்’ பட்டம் பெற்ற போது

‘குயின் எலிசபெத்’ ஃபெய் – ஃபெய் லி

லியின் ஆர்வம் மற்றும் கடின முயற்சியால் கடந்த ஆண்டு ‘World labs’ என்னும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஆரம்பித்த ஓராண்டிலேயே பெரிய பெரிய உயரங்களை தொட்டது இந்த நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு மட்டுமே 1 பில்லியன் டாலர்.

நிறுவனத்தில் பணிபுரிவதோடு மட்டும் நின்றுவிடாமல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

இதுவரை சில பெண்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள ‘குயின் எலிசபெத்’ பட்டத்தையும் பெற்றுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *