இந்த ஐடியா குழுவினருக்குப் பிடித்திருந்தது. பறவைகளின் சுருக்கமான ஒலியைக் குறிக்கும் வகையில் நோவா கிளாஸ் இதற்கு “twttr” (ட்விட்டர்) என்று பெயரிட்டார். ஆரம்பத்தில் உயிரெழுத்துக்கள் இல்லாமல் 5 எழுத்துக்களில் (Flickr போல) பெயர் வைப்பதே அப்போதைய ட்ரெண்டாக இருந்தது.
எல்லாம் தயாரான பிறகு, மார்ச் 21, 2006 அன்று 9:50 மணிக்கு ஜாக் டோர்சி தனது கணக்கில் இருந்து உலகின் முதல் ட்வீட்டைப் பதிவு செய்தார்.
“just setting up my twttr” (எனது ட்விட்டரை அமைத்துக் கொண்டிருக்கிறேன்)
இதுதான் வரலாற்றில் முதல் ட்வீட்!
