நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முன்னதாக, ஹெலிகாப்டரிலிருந்து நடிகர் ஜோஜூ ஜார்ஜ் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது அவர் தவறி கீழே விழுந்ததில் இடது பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
விரைவில், ஜோஜூ ஜார்ஜ் படப்பிடிப்பில் கலந்துகொண்டு மீதமுள்ள காட்சிகளை நடித்துக்கொடுக்க திட்டமிட்டுள்ளார். அதற்குள், டப்பிங் பணிகளை முடிக்க இயக்குநர் மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில், நடிகர் சிம்பு தனது டப்பிங் பணிகளை தொடங்கினார். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும் தன் டப்பிங் பணிகளைத் துவங்கியுள்ளார். இதற்கான, அறிவிப்பு விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
When #Ulaganayagan voices it, the World listens!#ThugsDubbingBegins #VoiceofThugs#KamalHaasan #ThugLife #SilambarasanTR@ikamalhaasan #ManiRatnam @SilambarasanTR_ @arrahman #Mahendran @bagapath pic.twitter.com/6acx8X82Fl
— Raaj Kamal Films International (@RKFI) July 29, 2024