தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று முடிந்தது.
இந்தாண்டின் அதிக எதிர்பார்ப்புள்ள தக் லைஃப் படத்தின் அப்டேட்கள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என நேற்று (மார்ச் 21) தெரிவித்திருந்தனர்.