நடிகர் கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் முதல் பாடல் டிரெண்டிங்கில் முதலிடத்தில் நீடிக்கிறது.
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பின் ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ளனர்.
இந்தப் படத்தில் சிலம்பரசன், நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, சான்யா மல்யோத்ரா என பலர் நடித்துள்ளார்கள்.
அதனால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கேங்ஸ்டர்ஸ் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு துவங்கப்பட்டு சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று கடந்த செப்டம்பரில் நிறைவடைந்தன.
படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு டீசரில் கமல், சிம்பு ஆகியோரின் தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ’ஜிங்குச்சா’ எனும் கமல்ஹாசன் எழுதிய இந்தப் பாடலை ஏப். 18 அன்று வெளியானது.
தற்போதுவரை (ஏப்.20) யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் நீடிக்கிறது.
திருமண விழா பாடல் என்றாலே அது மணிரத்னம்தான் என ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.